News Agency

கொரோனா வைரஸை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமைக்கு பாப்பரசர் அழைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைந்து செயற்படுமாறு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

வத்திகானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாரந்திர பிரார்த்தனை கூட்டத்திலேயே பாப்பரசர் பிரான்சிஸ் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில், ‘இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா நல்லிணக்கத்திற்கான சவாலான செயல்முறையைத் தொடங்கி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த செயல்முறை ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானம் ஆகியவற்றிலிருந்து இன்று நாம் பயனடைகிறோம்.

ஐரோப்பிய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஊக்கமளித்த அதே ஆத்மா, ஐரோப்பிய ஒன்றியத்தில் பொறுப்புள்ள அனைவருக்கும் ஊக்கமளிக்கத் தவறாது’ என கூறினார்.